உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / என்.எஸ்.எஸ்., முகாமில் 25 மரக்கன்று நடவு

என்.எஸ்.எஸ்., முகாமில் 25 மரக்கன்று நடவு

நாமக்கல்: நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன், என்.எஸ்.எஸ்., திட்ட முகாம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) ஜோதி, மாவட்ட திட்ட அலுவலர் அருள்தாஸ், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அப்துல் வகாப், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சீனிவாசராகவன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராமு, பள்ளியின் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சுமதி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம், மாவட்ட உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர், 25க்கும் மேற்பட்ட மரக்-கன்றுகள் நட்டு வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ