உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்

ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் சிக்கிய கள்ளக்காதலன்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, பறவைக்காட்டை சேர்ந்-தவர் ரமேஷ், 35; இவரது முதல் மனைவி பூங்கொடியுடன் வசித்து வருகிறார். ரமேஷின் இரண்டாவது மனைவி மணிமே-கலை, 29. இவர், பட்டணம் அடுத்த குச்சிக்காடு பகுதியில், இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை, பட்டணம் ஏரிக்கரையில் எரிந்த நிலையில் மணிமேகலை இறந்து கிடந்தார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: குச்சிக்காட்டை சேர்ந்த கைலாசம் மகன் பாலசுப்ரமணி, 27; கட்டட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி, ஆறு மாதத்தில் குழந்தை உள்ளது. இவர், ரமேஷின் இரண்டாவது மனைவி வீட்டின் அருகே வசித்து வந்தார். இவருக்கும், மணிமேகலைக்கும் கள்ளத்தொடர்பு ஏற்-பட்டது. கடந்த வாரம், பாலசுப்ரமணி, மணிமேகலையை கூட்டிச்-சென்று ஆத்துாரில் வீடு எடுத்து தங்க வைத்தார். தனியாக இருந்த மணிமேகலை, பாலசுப்ரமணியிடம் பணம் கேட்டு நச்சரித்-துள்ளார். இதையடுத்து கடந்த, 24ம் தேதி, மணிமேகலையை பட்-டணம் ஏரிக்கரைக்கு அழைத்து சென்ற பாலசுப்ரமணி, அங்கு தனிமையில் இருந்துள்ளார்.அப்போது, மணிமேகலை, பாலசுப்ரமணியிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாலசுப்ரமணி, 'உன் கணவனுடன் சென்றுவிடு' என, திட்டியுள்ளார். இதில் இருவ-ருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, பாலசுப்ரமணி, மணிமேக-லையை கல்லால் அடித்து கொலை செய்தார். பின், பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கிக்கொண்டு வந்த பாலசுப்ர-மணி, சடலம் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தலைம-றைவானார். சந்தேகத்தின் பேரில் பாலசுப்ரமணியிடம் போலீசார் விசாரித்தபோது, வெளியூரில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால், உள்ளூரில் இருந்த பாலசுப்ரமணியை பிடித்து விசாரித்த போது, மணிமேகலையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதை-யடுத்து பாலசுப்ரமணியை கைது செய்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை