உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பா.ஜ., பி.எல்.ஏ.,-2 நிர்வாகிகளுக்கு அறிவுரை

பா.ஜ., பி.எல்.ஏ.,-2 நிர்வாகிகளுக்கு அறிவுரை

நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் தொகுதியில், பா.ஜ., சார்பில் நியமிக்கப்பட்டுள்ள, பில்.எல்.ஏ.,2 நிர்வாகிகளுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. சில தினங்களாக ராசிபுரம் சட்டசபை பொறுப்பாளரும், மாநில துணை தலைவருமான துரைசாமி, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் பஞ்., வாரியாக சென்று, கிளைத்தலைவர்கள், பி.எல்.ஏ.,2 மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்களை சந்தித்தார். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி, மூலக்குறிச்சி, கார்கூடல்பட்டி, ஊனந்தாங்கல், நாரைக்கிணறு பகுதியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை வழங்கினார். மேலும், சட்டசபை பொறுப்பாளர் முத்துக்குமார் சட்டசபை இணை பொறுப்பாளர் சேதுராமன், ஒன்றிய தலைவர்கள் கண்ணன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ