உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு கூட்டம்

நாமக்கல்லில் அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர் சங்க செயற்குழு கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், 1,௦௦௦ கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 5 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினமும், 4.50 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. வளைகுடா நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளுக்கு, முட்டை ஏற்றுமதி செய்வதில் பல்வேறு பிரச்னைகளை பண்ணையாளர்கள் சந்தித்து வருகின்றனர்.இதையொட்டி, அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்க அவசர செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. தமிழ்நாடு கோழிப்பண்ணயாளர்கள் சங்க தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்தார். டில்லி தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) துணை இயக்குனர் ஹர்ஸ்வர்தன் மற்றும் பிரகயா ஜோசி ஆகியோர், முட்டை ஏற்றுமதியில் கோழிப்பண்ணையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள், அவர்களது தேவைகள், ஏற்றுமதிக்கான வழிவகைகள் உள்ளிட்ட பண்ணையாளர்கள் தெரிவித்த கருத்துகளை அறிக்கையாக தயார் செய்து, மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு துறைக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜூ, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நாமக்கல் மண்டல நிர்வாகிகள், முட்டை ஏற்றுமதியாளர்கள், பண்ணையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி