உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட அளவிலான கபடி போட்டி கரூர் செவன் பிரதர்ஸ் அணி முதல் பரிசு

மாவட்ட அளவிலான கபடி போட்டி கரூர் செவன் பிரதர்ஸ் அணி முதல் பரிசு

மோகனுார், ஆக. 21-மோகனுார் தாலுகா, எஸ்.வாழவந்தி உதயநிலா கபடி குழு சார்பில், 50ம் ஆண்டு தொடர் கபடி போட்டி, எஸ்.வாழவந்தியில் நடந்தது. வி.சி., ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். கபடி குழு நிர்வாகி கார்த்திக் வரவேற்றார். பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் போட்டியை துவக்கி வைத்தார்.அதில், நாமக்கல், கரூர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 27 அணிகள் கலந்து கொண்டன. முடிவில், கரூர் அரிகாரம்பாளையம் செவன் பிரதர்ஸ் அணி, முதல் பரிசும், எஸ்.வாழவந்தி உதயநிலா கபடி குழு, இரண்டாம் பரிசும், தளவாபாளையம் இளம் தென்றல் அணி, மூன்றாம் பரிசும், செல்லிபாளையம் ரஞ்சன் பிரதர்ஸ் அணி, நான்காம் பரிசும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே, 15,000 ரூபாய், 10,000 ரூபாய், 8,000 ரூபாய், 6,000 ரூபாய் பரிசுத்தொகை, பதக்கம் மற்றும் எலிசபெத் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. முப்பாடு கந்தசாமி, பரணிநாதன், சக்திவேல், வி.ஏ.ஓ., அன்புராஜ், வக்கீல் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை