உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதியவரை கொலை செய்ய முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை

முதியவரை கொலை செய்ய முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை

நாமக்கல், முதியவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற மர்ம நபர்கள், இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.நாமக்கல் அடுத்த தும்மங்குறிச்சி மேலப்பட்டி மேல்முகத்தை சேர்ந்தவர் சுப்புராயன், 80. இவரது மனைவி பழனியம்மாள். தம்பதியருக்கு, மூன்று மகள்கள். மூன்று பேருக்கும் திருமணமாகி விட்டது. பழனியம்மாள், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். சுப்புராயன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு சொந்தமாக, 7.5 ஏக்கரில் விவசாய நிலம் உள்ளது.இந்நிலையில், தோட்டத்தில் தனியாக இருந்த சுப்புராயனை, கடந்த, 17ல், மர்ம நபர்கள் இருவர், கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். படுகாயமடைந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து, சுப்புராயன் அளித்த புகார்படி, நல்லிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராறில் இச்சம்பவம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதற்கிடையே, அவரது மகள்கள் மூவரும், நாமக்கல் போலீஸ் எஸ்.பி., அலுவலகம் வந்து, 'தங்களது தந்தையை தாக்கிய, இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை