உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மஞ்சள் சீசன் தொடங்காததால் வரத்தின்றி 2வது வாரமும் ஏலம் ரத்து

மஞ்சள் சீசன் தொடங்காததால் வரத்தின்றி 2வது வாரமும் ஏலம் ரத்து

நாமகிரிப்பேட்டை : மஞ்சள் சீசன் தொடங்காததால், வரத்தின்றி இரண்டாவது வாரமும் ஏலம் ரத்து செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையில் கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம், வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. மஞ்சள் அறுவடை, ஜனவரி மாதத்தில் தொடங்கி பிப்ரவரியில் விற்பனைக்கு வரத்தொடங்கும். ஆனால், விலை ஏற்ற இறக்கம் காரணமாக, விவசாயிகள் மஞ்சளை அறுவடை செய்யாமல் வயலிலேயே விட்டுள்ளனர். அதனால், இதுவரை புதிய மஞ்சள் விற்பனைக்கு வரவில்லை. அதேசமயம், பழைய இருப்பு மஞ்சளை சில வாரங்களாக ஏலத்துக்கு கொண்டு வந்தனர். தற்போது, மஞ்சள் வரத்து சுத்தமாக இல்லாததால், கடந்து வாரம் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அதேநிலை, நேற்றும் தொடர்ந்ததால், இரண்டாவது வாரமாக மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. அடுத்த வாரமும் மஞ்சள் வரத்தை பொறுத்தே, ஏலம் நடைபெறும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை