உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் கால்கள் மீது ஏறி இறங்கிய பஸ்

பெண் கால்கள் மீது ஏறி இறங்கிய பஸ்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, எட்டிமடைபுதுார் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர-மணியம் மனைவி மணிமேகலை, 61; இவர், புதிய பஸ் ஸ்டாண்ட், காமராஜர் சிலை அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த அரசு பஸ், மணிமேகலை மீது மோதியது.கீழே விழுந்த மணிமேகலை மீது அரசு பஸ் ஏறி இறங்கியதில், அவரது இரண்டு கால்கள் நசுங்கி படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து குறித்து திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ