உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மொபைல் மெடிகேர் யூனிட் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

மொபைல் மெடிகேர் யூனிட் நடத்த தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு

நாமக்கல்: 'மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான, 'மொபைல் மெடிகேர் யூனிட்' நடத்துவதற்கு, அனுபவம் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:இந்தியாவில், மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியான, 'மொபைல் மெடிகேர் யூனிட்' திட்டம், தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மாவட்ட இயக்க மேலாண், மகளிர் திட்ட உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில், தொலைதுார கிராமங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு, நேரடியாக மருத்துவ வசதியை வழங்கும் வகையில், டாக்டர், நர்ஸ், மருந்தாளுனர், பிசியோதெரபிஸ்ட், யோகா பயிற்சியாளர், டிரைவர், சமூக சேவகர் உள்ளிட்ட பணியாளர்களை கொண்ட, ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தேவை.நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டாரத்தில், இத்திட்டத்தை செயல்படுத்த, மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலனில் அனுபவமிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.இதையொட்டி 'மொபைல் மெடிகேர் யூனிட்டில்', மேற்கண்ட பணியிடங்களுடன் கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது முழு விபரங்கள் அடங்கிய ஆவணங்களின் நகல்களுடன், நாமக்கல் மாவட்ட சமூகநல அலுவலரிடம் வரும், ஜன., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான விண்ணப்ப படிவம் மற்றும் விபரங்களை பெறுவதற்கு, மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடத்தில் செயல்பட்டுவரும், மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி