நாமகிரிப்பேட்டை, சின்ன வெங்காயம், மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்ய, நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் யோகநாயகி, விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராசிபுரம் வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 'ரபி-2025' பருவத்திற்கு சின்ன வெங்காயம், மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்துகொள்ளலாம். பயிர் காப்பீடு செய்வதன் மூலம், வடகிழக்கு பருவமழையால் சேதம் ஏற்படும்பட்சத்தில், நிவாரணம் பெற இயலும். எனவே, விவசாயிகள் தங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஒரு ஹெக்டேர் சின்ன வெங்காய பயிருக்கு, 5,218 ரூபாய் மற்றும் மரவள்ளி பயிருக்கு, 1,310 ரூபாய், தக்காளிக்கு, 4,600, வாழைக்கு, 4,736 பிரீமிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தக்காளி, சின்ன வெங்காய பயிருக்கு, 2026 ஜன., 31லும், வாழை, மரவள்ளி பயிருக்கு, பிப்., 28லும் பிரீமியம் செலுத்த கடைசி நாளாகும். தகவல்களுக்கு நாமகிரிப்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.