உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

பூட்டி கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

வெண்ணந்துார்: வெண்ணந்துார் அடுத்த அளவாய்பட்டி கிராமத்தில், 800க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். குடிநீர், உப்பு நீராக மாறியதால், மக்களின் கோரிக்கையை ஏற்று அளவாய்பட்டி கிராமத்தில், கடந்த, 2 ஆண்டுக்கு முன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் திறந்து, இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், மூடியே கிடப்பதாகவும், இதனால் அடிப்படை வசதியான குடிநீரின்றி தவிப்பதாகவும் ஊர்மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், நேர காலமின்றி இரண்டு, மூன்று தினங்கள் காவிரி நீர் வினியோகம் செய்தாலும், குடிநீருக்காக, 2 கிலோ மீட்டர் நடந்து செல்லும் நிலை இருப்பதாக கூறுகின்றனர். இதனால் வயதானவர்கள் குடிநீர் எடுக்க முடியாமல் சிரமப்படுவதாகவும், உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் அளவாய்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை