உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் டிபாசிட் செய்த பணத்தை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம்

பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் டிபாசிட் செய்த பணத்தை பெற்றுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: பி.ஏ.சி.எல்., நிறுவனத்தில் டிபாசிட் செய்தவர்களின் பணத்தை, வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று நடந்தது.ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை தலைமையிடமாக கொண்டு, 'பெராஸ் அக்ரோடெக் கார்ப்பரேஷன் லிமிடெட்' என்ற பெயரில் (பி.ஏ.சி.எல்.,) என்ற நிறுவனம், 1983ல் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில், நாடு முழுவதும், 5.85 கோடி முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர். தமிழகத்தில், ஒரு கோடி முதலீட்டாளர்கள், 10,000 கோடி ரூபாய் டிபாசிட் செய்துள்ளனர்.இந்நிலையில், இந்நிறுவனம் பொதுமக்களிடம் டிபாசிட் பெறுவதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதற்கிடையில், ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி, அமைக்கப்பட்டு, முதலீட்டாளர்களுக்கு டிபாசிட் தொகையை, ஆறு மாதத்தில் அளிக்க உத்தரவிட்டது. ஆனால், இதுவரை, டிபாசிட் தொகை கிடைக்காததால், அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாய முன்னேற்ற கழக அரசியல் உயர்மட்ட குழுத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். 'முதலீட்டாளர்கள் செலுத்திய டிபாசிட் தொகையை வட்டியுடன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !