உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் விழா பாதுகாப்பு டி.எஸ்.பி., நேரில் ஆய்வு

கோவில் விழா பாதுகாப்பு டி.எஸ்.பி., நேரில் ஆய்வு

குமாரபாளையம்,குமாரபாளையம், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, டிச., 1ல் நடக்கவுள்ளது. இதில் அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன், நேற்று நேரில் ஆய்வு செய்தார். கோவில் வளாகம், யாக சாலை, அன்னதானம் வழங்கும் இடம், பக்தர்கள் கூடும் இடம் உள்ளிட்டவை ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த அறிவுறுத்தினார். கூட்டத்தை பயன்படுத்தி திருடர்கள் வர வாய்ப்பு உள்ளதால், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை