கழிவுநீரை திருப்பி விட விவசாயிகள் கோரிக்கை
பனமரத்துப்பட்டி, அக். 31பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்தில் இருந்து கழிவுநீர் மற்றும் மழைநீர், கால்வாய் வழியே, 11வது வார்டு தாசிக்காடுக்கு செல்கிறது. சமீபத்தில் கனமழையால், பக்கத்தில் உள்ள ச.ஆ.பெரமனுார் ஊராட்சி பகுதி விவசாய வயலில் கழிவுநீர் புகுந்தது.தொடர்ந்து, 20 ஏக்கருக்கு தண்ணீர் தேங்க, அரளி, மஞ்சள், சோளம், செடிகள், வேர் அழுகி, மடியும் நிலைக்கு ஆளாகியுள்ளன. வயலில் கழிவு பாய்வதை தடுக்க வேண்டும். கழிவுநீர் செல்லும் தடத்தை வேறு வழியில் திருப்பி விட, விவசாயிகள் வலியுறுத்தினர்.