உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா

வேளாண்மைத்துறை சார்பில் வயல் தின விழா

நாமக்கல்:நாமக்கல் அடுத்த வீசாணம் கிராமத்தில், வேளாண்மைத்துறையின் அட்மா திட்டத்தின் கீழ், விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த ஆராய்ச்சி -விரிவாக்கம், வயல் தினவிழா மற்றும் கிசான் கோஸ்தீஸ் திட்ட பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் சித்ரா பயிற்சி அளித்தார். அதில் பருத்தி பயிரில் காய்ப்புழுத் தாக்குதலின் அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள், கடைப்பிடிக்க வேண்டிய விதைதேர்வு, விதைநேர்த்தி, மண் பரிசோதனையின் படி உரமிடல், பயிர் சுழற்சி, கோடை உழவு, நீர் மேலாண்மை, அறுவடை பின்செய் நேர்த்தி போன்ற காரணிகளை பயன்படுத்தி குறைந்த வேலையாட்கள், குறைந்த முதலீடு அதிக மகசூல், அதிக லாபம் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது.கோவை வேளாண்மை பல்கலைக்கழக மண்ணியல் துறை ஓய்வுபெற்ற விஞ்ஞானி அப்பாவு, மண்வகைகள், மண்வளம் குன்றுவதற்கான காரணம், குறைந்த மண்ணின் ஈரப்பதம், நிலவள மேலாண்மை, மண்வள மேலாண்மை, தொழில்நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை, பராம்பரிய வேளாண்மை, பயிர் சுழற்சி முறை, கலப்பு பயிர்களின் நன்மைகள், பாரம்பரிய விதைகள், தொழில்நுட்ப கருவிகள் கொண்டு தரிசு நிலங்களை மேம்படுத்தல் குறித்து விளக்கினார்.பயிற்சியில், விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் பருத்தி பயிருக்கு பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சான கொல்லி மருந்து தெளிப்பு குறித்த செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பேராசிரியர் ரவிசங்கர், உழவியல் துறை பூவரசன், வேளாண்மை அலுவலர் மோகன், அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி தொழில் நுட்ப மேலாளர் கவிசங்கர், உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை