உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கோமதி தலைமை வகித்தார். செயலாளர் தங்கராஜூ கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில், சத்துணவு மையங்களில் பாதிக்கும் மேல் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வழங்க இயலாத நிலை உள்ளது. மாணவர்களின் நலன் கருதி, உடனடியாக காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களை, அரசு ஊழியர்களாக்கி முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை