உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நவீன இயந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி

நவீன இயந்திரம் மூலம் நிலக்கடலை சாகுபடி

வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மாண்டப்பட்டி பகுதியில், நிலக்கடலை சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மானாவாரி பகுதியான இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் என்பது தட்டுப்பாடான நிலையில் தான் இருந்து வருகிறது. அதனால் தற்போது எரிபொருள் இன்றி எளிமையாக மனித சக்தியை பயன்படுத்தி நிலக்கடலை சாகுபடி செய்யும் இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இதை பயன்படுத்தி விவசாயியே தனது நிலத்தில் நிலக்கடலையை ஊன்றி சாகுபடியை தொடங்கலாம். விரைவாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் கடலையை விதைக்க முடியும். கடலை மட்டுமின்றி, உளுந்து, பயறு போன்றவற்றையும் இந்த இயந்திரத்தை கொண்டு நடவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை