| ADDED : பிப் 25, 2024 04:10 AM
15 ஏக்கர் வனப்பகுதியில்தீ வைத்தவருக்கு காப்புஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த இருதுக்கோட்டை ஆலஹள்ளியை சேர்ந்தவர் முனிராஜ், 50; நொகனுார் காப்புக்காட்டில் கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர், வனப்பகுதிக்கு தீ வைத்தார். இதில், 15 ஏக்கரில் இருந்த தாவரங்கள், சிறிய அளவிலான உயிரினங்கள், பறவைகள், சிறிய பாலுாட்டியினங்கள் உயிரிழந்ததாக, வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து, முனிராஜை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர்.தனியார் நிறுவனத்தில் திருடிய டிரைவர் கைதுஓசூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு பொம்மனஹள்ளியை சேர்ந்தவர் கைலாஷ்ராம், 61, ஓசூர் தனியார் நிறுவன மேலாளர்; இந்த நிறுவனத்தில், விழுப்புரம் மாவட்டம், பாவந்துாரை சேர்ந்த வெங்கடேசன், 21, என்பவர் டிரைவராக பணியாற்றி வந்தார்; இவர் நிறுவனத்தில் இருந்து உதிரிபாகங்கள் ஏற்றி கொண்டு, மற்றொரு தனியார் நிறுவனத்திற்கு பிக்கப் வாகனத்தில் சென்று டெலிவரி செய்து வந்தார்.வெங்கடேசன் அவ்வப்போது 10 பெட்டிகளை வாகனத்தில் திருட்டுத்தனமாக எடுத்து சென்றுள்ளார். இதையறிந்த மேலாளர் கைலாஷ்ராம், நேற்று முன்தினம் சிப்காட் போலீசில் புகார் செய்தார். டிரைவர் வெங்கடேசனை கைது செய்த போலீசார், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 பெட்டிகளில் இருந்த உதிரிபாகங்களை பறிமுதல் செய்தனர்.