உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

நாமக்கல்: 'கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி எச்ச-ரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். உர உரிமம் புதுப்பிக்காமலோ, எம்.ஆர்.பி.,-யை விட அதிக விலைக்கு உரங்களை விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு உரம் விற்-பதை கண்டறிந்தால், கடையின் உர உரிமம் ரத்து செய்யப்படும்.யூரியா உரங்கள் கொடுக்கும் போது, விவசாயிகளின் முகவரி, மொபைல் போன் எண்ணுடன், ரசீது கொடுக்க வேண்டும். அனு-மதி பெற்ற இடங்களில் மட்டுமே உரங்களை வைத்திருக்க வேண்டும். விவசாயிகள் யூரியா உரத்தை அதிகபட்சமாக, ஏக்கர் நெற்பயிருக்கு, இரண்டு மூட்டைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும்.உரங்களை அருகாமையில் உள்ள மாவட்டத்திற்கு விற்பனை செய்தாலோ, கடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து வகையான பயிர்களுக்கு கிடைக்கக்கூடிய உயிர் உரங்கள், இலைவழி தெளிப்பு உரங்கள், நுண்ணுாட்டச்சத்து உரங்கள் பயன்படுத்துவதால், பயிருக்கு வழங்கப்படும் உர அளவை குறைத்து, மண் வளத்தை பாதுகாத்து, உரச்செலவை குறைத்து அதிகமகசூல் பெறலாம்.சில்லறை உர விற்பனை நிலையங்களில், உரங்கள் மற்றும் பூச்சி-மருந்து அதிகபட்ச சில்லறை விலைக்கு விற்பனை செய்வது தெரி-யவந்தால், சம்பந்தப்பட்ட உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலைய உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ