உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மணப்பள்ளி முனியப்பன் கோவில் விழா கோலாகலம்

மணப்பள்ளி முனியப்பன் கோவில் விழா கோலாகலம்

மோகனுார்: மோகனுார் அடுத்த மணப்பள்ளி முனியப்பன் கோவில் திருவிழா, 3 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வாக, மாரியம்மன்னுக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபி ேஷக ஆராதனை நடைபெற்றது. இரண்டாவது நாள், சொக்கநாயகி அம்மனுக்கு தீர்த்தம் கொண்டு வந்து பல்வேறு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்றது, மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் காலை முனியப்பன் சுவாமிக்கு காவல் கொடுத்து கிடா வெட்டுதலும், மதியம் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. சுவாமி காவிரி ஆற்றில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தது. அன்று மாலை மாவிளக்கு அழைப்பு, மாவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ