| ADDED : பிப் 17, 2024 12:55 PM
நாமக்கல்: 'மேகதாதுவில் அணை கட்ட முக்கியத்துவம் கொடுக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. அவற்றை வன்மையாக கண்டிக்கிறோம்' என, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேலுசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகா அரசின் நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 'காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முக்கியத்துவம்' கொடுக்கப்படும் என, அறிவித்துள்ளது. அரசின் அறிவிப்புக்கு, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. கர்நாடகா அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால், தமிழக விவசாயிகள் அனைவரையும் ஒன்று திரட்டி, அணையை உடைத்து தகர்ப்போம்.தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையை, ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.