உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சென்டர் மீடியன் மீது மொபட் மோதி புல உதவியாளர் பலி

சென்டர் மீடியன் மீது மொபட் மோதி புல உதவியாளர் பலி

நாமக்கல்: எருமப்பட்டி அடுத்த வரகூரை சேர்ந்தவர் ஜெயராமன், 56. இவர், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சர்வே துறையில் புல உதவியாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, தனது மொபட்டில் வள்ளிபுரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் மொபட் மோதி விபத்துக்குள்ளானது.இதில் படுகாயமடைந்த ஜெயராமனை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி