உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

ராசிபுரம்: மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, ராசிபுரத்தில் நடந்தது. மாரியம்மன் கோவில் முன் துவங்கிய பேரணிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரதீபா தலைமை வகித்தார். போக்குவரத்துத்துறை இன்ஸ்பெக்டர் சக்திவேல் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., ராஜா பேரணியை துவக்கி வைத்தார். பேரணியில், சாலை பாதுகாப்பின் முக்கியதுவம், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம், மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றுவது, சிக்னல்களில் கவனிக்க வேண்டியவை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முத்தாயம்மாள் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை