உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பெண் மீது தாக்குதல் மூவர் அதிரடி கைது

பெண் மீது தாக்குதல் மூவர் அதிரடி கைது

ப.வேலூர்: முன்விரோதம் காரணமாக, பெண் மீது தாக்குதல் நடத்திய மூவரை, ஜேடர்பாளையம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ப.வேலூர் அருகே ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். அவரது மனைவி சித்ராவுக்கும், அவர்கள் வீட்டின் அருகே வசிக்கும் பழனிச்சாமிக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம், மீண்டும் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பனிழச்சாமி, அவரது மனைவி சாந்தி(32), உறவினர் முருகன் ஆகிய மூவரும் சேர்ந்து, சித்ராவை தாக்கியுள்ளனர். அதில் படுகாயமடைந்த சித்ரா, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஜேடர்பாளையம் போலீஸார், பழனிச்சாமி, சாந்தி, முருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை