உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை வரும் 31 வரை நீட்டிப்பு

நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை வரும் 31 வரை நீட்டிப்பு

நாமக்கல்: 'நாமக்கல், கொல்லிமலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் நேரடி சேர்க்கை வரும், 31 வரை நீட்-டிக்கப்பட்டுள்ளது' என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நடப்பு, 2024-25ம் ஆண்டிற்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்-களில் நேரடி சேர்க்கை, கடந்த, 1ல் துவங்கி, 15 வரை நடந்தது. மேலும், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை, வரும், 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்புவோர் கல்விச்சான்று, ஜாதிச்சான்று, மாற்றுச்சான்று, ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை கொண்டு, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரில் சென்று சேர்ந்து கொள்-ளலாம். குறைந்தபட்சம், 14 வயது பூர்த்தியடைந்தவர்களும், அதி-கபட்சம் ஆண்களுக்கு, 40 வயதுடையவர்களும் விண்ணப்பிக்-கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும், 31.பயிற்சி காலத்தின்போது மாதம், 750 ரூபாய் கல்வி உதவித்-தொகை உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்கப்படும். தொழிற்ப-யிற்சி நிலையங்களில், வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு, முன்னணி தொழிற் நிறுவனங்களில் ஓராண்டிற்கு உதவித்தொகை-யுடன் கூடிய ஒப்பந்த முறையில் தொழிற்பழகுனராக பயில வாய்ப்புள்ளது.விபரங்களுக்கு, நாமக்கல், கொல்லிமலையில் இயங்கும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது 9499055843, 9499055846, 04286--299597, -247472 மொபைல் போன், தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி