மேலும் செய்திகள்
சிறுமியிடம் சில்மிஷம் ஒடிசா வாலிபர் கைது
05-Oct-2025
அதிக விலைக்கு மது விற்றவர் கைது
05-Oct-2025
திருச்செங்கோடு : நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் மதுராசெந்தில் வெளியிட்ட அறிக்கை:சேலம் மாவட்டம், பெத்த நாயக்கன்பாளையத்தில், இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி தலைமையில், தி.மு.க., இளைஞரணியின், 2வது மாநில மாநாடு, நாளை (21ல்) நடக்கிறது.'இது கூடிக்கலையும் நிகழ்வல்ல. கொள்கையை கூர்தீட்டும் உலைக்களம். மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடு' என்பதற்கிணங்க, இளைஞரணி மாநாடு, இந்தியாவின் மாநாடு என்று சொல்லத்தக்க வகையில் பிரமாண்டமாக நடக்க உள்ளது.வரும் பார்லிமென்ட் தேர்தலில், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும் வகையில் திருப்புமுனை மாநாடாக அமையவுள்ளது.இந்த மாநாட்டில், நாமக்கல் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக இளைஞரணி நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இளைஞரணியை சேர்ந்த அனைவரும், வெண் சீருடையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
05-Oct-2025
05-Oct-2025