உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நரசிம்மருக்கு தைலக்காப்பு சாத்துப்படி: தரிசனத்துக்கு தடை

நரசிம்மருக்கு தைலக்காப்பு சாத்துப்படி: தரிசனத்துக்கு தடை

நாமக்கல் : நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்மர் சுவாமிக்கு தைலக்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டதால், நேற்று மாலை வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.வைகாசி விசாகத்தில், நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு தைலக்காப்பு சாத்துப்படி செய்யப்பட்டது. இதனால், காலை, 10:00 மணி முதல் மாலை, 6:30 மணி வரை நரசிம்மர் கோவிலில் மூலவர் நடை அடைக்கப்பட்டது. இதன் காரணமாக, பக்தர்கள் சன்னதிகளில் வழிபாடு செய்தனர். மாலை, 6:30 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு வழக்கம்போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை