உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வெப்படையில் பஸ் நிற்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

வெப்படையில் பஸ் நிற்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

பள்ளிப்பாளையம்: வெப்படையில், பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிப்பாளையம் அருகே வெப்படை மற்றும் சுற்றுவட்டாரத்தில், 80 க்கும் மேற்பட்ட நுாற்பாலைகள், பல தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இதனால் வெப்படை பஸ் ஸ்டாப்பில் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்து காணப்படும். சேலத்தில் இருந்து ஈரோட்டிற்கும், ஈரோட்டில் இருந்து சேலத்திற்கும் செல்லும் சில தனியார் பஸ்கள் வெப்படை பஸ் ஸ்டாப்பில் நிற்பதில்லை.பஸ்சில் ஏறி, வெப்படைக்கு டிக்கெட் கேட்டாலும், பஸ் நிற்காது என இறக்கி விடுகின்றனர். இதனால் பல முறை தனியார் பஸ்களை, பொதுமக்கள் வெப்படை பஸ் ஸ்டாப்பில் சிறை பிடித்துள்ளனர். கடந்த மாதம், 26ம் தேதி எலந்தகுட்டை பஞ்., பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வெப்படை பஸ் ஸ்டாப்பில் அனைத்து தனியார் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். இது குறித்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானம் கடிதம், குமாரபாளையம் போக்குவரத்து அலுவலருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து வரும், 29ம் தேதி சில்லாங்காடு பகுதியில் உள்ள குமாரபாளையம் போக்குவரத்து அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது.இது குறித்து வெப்படையை சேர்ந்த சந்தோஷ் என்பவர் கூறியதாவது; பேச்சு வார்த்தை வெப்படை பகுதியில் நடத்த வேண்டும். அப்போது தான், வெப்படை பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பாக அமையும். எனவே வெப்படையில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை