மாவட்ட ஜூனியர் தடகளம்நாமக்கல்லில் நாளை துவக்கம்நாமக்கல்லில் நாளை, (27ம் தேதி) மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள் தொடங்குகிறது.இது குறித்து, நாமக்கல் மாவட்ட தடகள சங்க தலைவரும், நாமக்கல் எம்.பி.,யுமான சின்ராஜ், செயலாளர் வெங்கடாஜலபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாமக்கல் மாவட்ட அளவிலான ஜூனியர் தடகள போட்டிகள், நாளை நாமக்கல் விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. 14, 16 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், உரிய பிறந்த தேதி சான்றுடன் வரும், 27 காலை, 7:00 மணிக்குள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.ட்ரையாத்லான் போட்டி, 60 மீட்டர், 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 600 மீட்டர் குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் பெண்டத்லான் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மலரஞ்சலிமொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளையொட்டி, குமாரபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு துாணிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. அனைவரும் மலர் துாவி, மரியாதை செலுத்தினர். தி.மு.க., மாவட்ட செயலர் மதுராசெந்தில், பொருளாளர் ராஜாராம், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், எஸ்.எஸ்.எம். பொறியியல் கல்லுாரி தலைவர் மதிவாணன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்புவெண்ணந்துார் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஹேமாவதி பணியாற்றி வந்தார். இவர் சேலம் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து, ராசிபுரம் பகுதியில் பணியாற்றி வந்த சுகவனம், வெண்ணந்துார் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். இவருக்கு எஸ்.ஐ.,க்கள், போலீசார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.பஞ்., தலைவர் தர்ணா போராட்டம்நடத்தியதால் அதிகாரிகள் சமரசம்முத்துக்காப்பட்டி பஞ்.,ல், ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியன், முத்துக்காப்பட்டி பஞ்., மோதமாதேவி பகுதியில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், அதை அகற்ற வேண்டும் என பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என கூறி, பஞ்., தலைவர் அருள்ராஜேஸ் பஞ்., அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதையடுத்து அங்கு சென்ற தாசில்தார் சீனிவாசன், எருமப்பட்டி பி.டி.ஓ., பத்மநாபன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வரும் திங்கட்கிழமை நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.கொல்லிமலை நீர் மின் திட்டசுரங்கபாதையில் ஆய்வுகொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் நீர்மின் திட்டப்பணிகளை பார்வையிட்டு, திட்டத்திற்காக அமைக்கப்பட்டு வரும் சுரங்க பாதையில் கலெக்டர் உமா அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.மேலும் கொல்லிமலை மாசிலா அருவியை பார்வையிட்டு, நீர் வரத்து குறித்தும், சுற்றுலா பயணிகளின் வருகை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின் எடப்புளிநாடு ஊராட்சி, செங்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை விபரங்கள், மருந்துகளின் இருப்பு, படுக்கை வசதி, வருகை விபரம் பதிவேடு உள்ளிட்டவைகளை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு பணி மேற்கொண்டார். சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், அக்கியம்பட்டி ஊராட்சி, கோனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டு, உணவின் சுவை குறித்து விசாரித்தார்.ப.வேலுாரில் வரும் 28ல்இலவச கண் சிகிச்சை முகாம்நாமக்கல் ப.வேலுார் லயன்ஸ் சங்கம் சார்பில் வரும், 28ல் இலவச கண் சிகிச்சை முகாம் ப.வேலுார் பள்ளி சாலையில் உள்ள அரிமா சங்க வளாகத்தில் நடக்கிறது. முகாமில், கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு, உடலில் உள்ள ரத்தக்கொதிப்பு அளவு மற்றும் கண்ணில் பிரஷர் அளவு ஆகியவை இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது. கண் அறுவை சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு, மதுரைக்கு லயன்ஸ் சங்கம் சார்பில் அழைத்து சென்று இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பஸ் வசதி, மருந்து, கண் கண்ணாடி, உணவு வசதி அனைத்து ஏற்பாடுகளையும் ப.வேலுார் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவசமாக நடக்கிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும். பரமத்தி வேலுார் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.தலைமலை அடிவாரத்தில் பவுர்ணமி கிரிவலம்எருமப்பட்டி அருகே, தலைமலை அடிவாரத்தில் பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.எருமப்பட்டி அருகே தலைமலை உச்சியில், 2,700அடி உயரத்தில் சஞ்சீவிராய பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள அடிவாரத்தில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்வதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, 27கி.மீ., துாரத்தில் கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதேபோல், நேற்று தை மாத பவுர்ணமியையொட்டி எருமப்பட்டி, ஏழுர், தொட்டியம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள், அடிவாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மெர்லியன் மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாமல்லுார் நெம்பர்-3 கொமாரபாளையம் மெர்லியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 15வது பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சாகச நிகழ்ச்சிகள் அரங்கேறியது. பள்ளி தாளாளர் மோகன் வரவேற்றார். சாந்தி மோகன், வளர்மதி (வட்டார கல்வி அலுவலர், வெண்ணந்துார்), கணேசன் (மாவட்ட கல்வி அலுவலர் தனியார் பள்ளி, நாமக்கல்), சின்ராஜ், (நாமக்கல் எம்.பி.,) சக்திவேல் (தாளாளர் - ஆனந்த வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.பட்டணம்), முத்துசாமி (தாளாளர் - கே.வி.எம். மெட்ரிக் பள்ளி ஆர்.புதுப்பாளையம்) ஆகியோர் சிறப்பாளர்களாக கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். பள்ளி முதல்வர் செந்தில்குமார் ஆண்டு அறிக்கை வாசித்து, நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த சரவணக்குமார், கெளசிகன் ஆகியோருக்கு பள்ளி முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.ஓட்டுனர்கள் போராட்டம்தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுனர் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பில், நாமக்கல் அடுத்த பொம்மைக்குட்டைமேட்டில் அறவழி கவன ஈர்ப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது.மாநில தலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார். அதில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வாகன சட்ட மசோதவை திரும்ப பெற வேண்டும். ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றி அரசிதழில் வெளியிட வேண்டும். தேர்தல் சமயத்தில், வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஓட்டுனர்களுக்கு தபால் ஓட்டுரிமை வழங்க வேண்டும்.வெளி மாநிலங்களில், உயிரிழப்பு ஏற்படும் ஓட்டுனர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கவுரவ தலைவர் சரவணன், மாநில துணைத் தலைவர் சீனிவாசன், மாநில செயலாளர் வடிவேல், பொருளாளர் உமாபதி மற்றும் பலர் பங்கேற்றனர்.அரசு பள்ளியில் ஆண்டு விழாஆசிரியர்கள் காலில் விழுந்த எம்.பி.,ராசிபுரம், அரசு பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் முன்னாள் மாணவரான எம்.பி., ராஜேஸ்குமார், ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா நடந்தது. முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், பரிசு வழங்கும் விழா நடந்தது. எம்.பி., ராஜேஸ் குமார், நகராட்சி சேர்மன் கவிதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் முன்னாள் மாணவரான எம்.பி., ராஜேஸ் குமார், அங்கு வந்திருந்த ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.மொழிப்போர் தியாகிகள்வீரவணக்க நாள் கூட்டம்நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க., மாணவர் அணி சார்பில், நேற்று பூங்கா சாலையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. எம்.பி., ராஜேஸ்குமார் தலைமை வகித்தார். ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகர செயலர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், நகராட்சி தலைவர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி செயலர் சத்தியசீலன் வரவேற்றார்.தி.மு.க., துணை பொதுச்செயலர் எம்.பி., ராஜா பேசியதாவது:- அரசு பள்ளிகளில் படித்து பின் கல்லுாரிக்கு செல்லும் மாணவிகளுக்கு ஜாதி, மதம் பார்க்காமல் மாதம், 1,000 ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகத்தில் பேரிடர் வந்த போது, முதல்வர், 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் கேட்டார். ஆனால், 500 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து வஞ்சித்து விட்டது. இவ்வாறு பேசினார்.நாமக்கல் போலீசாருக்குகுடியரசு தலைவர் விருதுநாமக்கல்லை சேர்ந்த, இரு போலீசாருக்கு குடியரசு தலைவர் விருது கிடைத்துள்ளது. குடியரசு தின விழாவில், ஆண்டுதோறும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு, காவல்துறையில் மெச்சத்தக்க காவல் விருது, நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் இரண்டு போலீசாருக்கு கிடைத்துள்ளது. நாமக்கல்லில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் அருள்முருகன் மற்றும் நாமகிரிப்பேட்டையில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றும் ஈஸ்வரன் ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட இருவரையும் அதிகாரிகள் பாராட்டினர்.