ப.வேலுார், ப.வேலுார் பஸ் ஸ்டாண்டில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் தனியார் பஸ்சில் பயணிகள், 10க்கும் மேற்பட்டோர், நேற்று மாலை, 5:00 மணிக்கு அமர்ந்திருந்தனர்.பொத்தனுார், கிழக்கு வண்ணான் துறை, கோப்பணம்பாளையம் ஆகிய கிராம பகுதி வழியாக பாண்டமங்கலம் சென்று, அதே வழியாக திரும்பி, ப.வேலுார் வந்தடையும். கடந்த சில நாட்களாக பாண்டமங்கலத்திற்கு, அந்த தனியார் பஸ் செல்வதில்லை.இதனால் பாண்டமங்கலத்துக்கு செல்லும் பயணிகள் அடுத்த பஸ்சுக்காக, ஒரு மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.இந்நிலையில், நேற்று தனியார் பஸ்சில், டிரைவர் கோபிநாத், 40, கண்டக்டர் நவீன் குமார், 40 ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது ப.வேலுாரில் இருந்து பாண்டமங்கலம் பஸ் செல்லாது எனவும், தற்போது கரூர் செல்கிறது என, தெரிவித்தனர்.மேலும், பாண்டமங்கலம் செல்ல இருந்த பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்குமாறு தெரிவித்தனர்.இதனால் ஆவேசமடைந்த பயணிகள், பஸ் கண்டக்டர், டிரைவரிடம் வாக்குவாதம் செய்தனர்.மேலும், கரூர் செல்ல இருந்த தனியார் பஸ்சை சிறைபிடித்து, ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதனால் மேற்கொண்டு பஸ்சில் பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பஸ் டிரைவர், கண்டக்டர் இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.