உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி, 'போட்டோ-ஜியோ' அமைப்பு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவ-லகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு நில அளவு கணித வரைவாளர் ஒன்றிப்பு மாநில தலைவர் பிரபு, கோரிக்கைகளை விளக்கி பேசினார்.இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துத் துறைக-ளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நுாலகர்கள், கிராம உதவியாளர்களை பணி நிரந்-தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி-களில் பணியாற்றுவோரை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்-பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை