மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
பள்ளிப்பாளையம் : பள்ளிப்பாளையம் அருகே, பெரியார் நகர் காவிரி ஆற்றுப்பகுதியில் படித்துறை உள்ளது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், தினமும் குளிக்கவும், துணி துவைக்கவும் இந்த படித்துறைக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை, படித்துறைக்கு வந்த பொது மக்கள், ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, ஆற்றில் மிதந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தவருக்கு, 40 வயதிருக்கும், ஊர், பெயர் போன்ற விபரங்கள் தெரியவில்லை. பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என, பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025