மேலும் செய்திகள்
ரூ.24 லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம்
08-Oct-2025
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
08-Oct-2025
மயங்கி விழுந்த மூதாட்டி பலி
08-Oct-2025
100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
ராசிபுரம்: ராசிபுரம் உழவர் சந்தையில் தக்ககளி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. 15 நாட்களுக்கு முன், தக்காளி விலை கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, கிலோ, 36 ரூபாய்க்கு விற்பனையானது.கடந்த வாரத்தை விட கிலோவுக்கு, 14 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல் கத்திரிக்காய் விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ, 60 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய், நேற்று, 72 ரூபாய்க்கு விற்பனையானது. தக்காளி கிலோ, 36, கத்திரி, 72, வெண்டை, 36, புடலை, 40, பீர்க்கன், 55, பாகல், 70, சுரைக்காய், 12, பச்சை மிளகாய், 68, சின்ன வெங்காயம், 60, பெரிய வெங்காயம், 48, முட்டைகோஸ், 45 ரூபாய்க்கு விற்பனையானது.நேற்று ஒரே நாளில், 133 விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்க கொண்டு வந்திருந்தனர். 12,740 கிலோ காய்கறி, 2,190 கிலோ பழங்கள், 200 கிலோ பூக்கள் என மொத்தம், 15,130 கிலோ விற்பனையாகின. இதன் மொத்த மதிப்பு, 6.81 லட்சம் ரூபாயாகும். 2,860 நுகர்வோர் உழவர் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கி சென்றனர்.
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025
08-Oct-2025