உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கபிலர்மலை அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

கபிலர்மலை அருகே மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது

ப.வேலுார்: கபிலர்மலை அருகே, மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்து, டிரைவரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை அருகே நடந்தை கிராமம், சூரம்பாளையத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து லாரியில் மண் ஏற்றிக்கொண்டு, சில தினங்களாக கபிலக்குறிச்சி வழியாக இருக்கூருக்கு அதிவேகமாக குடியிருப்பு பகுதியில் லாரி சென்று வந்துள்ளது.மேலும், மண் ஏற்றிய லாரி மேல் பகுதியை மூடாமல் சென்றதால், அப்பகுதியில் மண் பறந்து டூவீலர்களில் செல்பவர்களின் கண்களில் படுவதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, லாரியில் மண் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக குடியிருப்பு பகுதியில் வந்த லாரியை, கபிலர்மலையை சேர்ந்த மக்கள் சிறை பிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த பாண்டமங்கலம் ஆர்.ஐ., பூங்கொடி நடத்திய விசாரணையில், சேந்தமங்கலம் அருகே, புதுக்கோட்டையில் மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்றுவிட்டு, கபிலர்மலை பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மண் கடத்திச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து, ஆர்.ஐ., பூங்கொடி கொடுத்த புகார்படி, லாரியை பறிமுதல் செய்த ஜேடர்பாளையம் போலீசார், திருச்சி மாவட்டம், லால்குடியை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன், 45, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை