உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சிலவரி செய்திகள்: நாமக்கல்

சிலவரி செய்திகள்: நாமக்கல்

157 கிலோ பட்டுக்கூடு : ரூ.67,000க்கு விற்பனைராசிபுரம்: ராசிபுரத்தில் கூட்டுறவு பட்டுக்கூடு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு, தினசரி பட்டுக்கூடு விற்பனை நடந்து வருகிறது. நாமக்கல், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு விவசாயிகள், ராசிபுரத்திற்கு வந்து பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகின்றனர். நேற்று, 157.050 கிலோ விற்பனையானது. இதில், அதிகபட்சம் கிலோ, 475 ரூபாய், குறைந்தபட்சம், 390 ரூபாய், சராசரி, 427.04 ரூபாய் என, 157.050 கிலோ பட்டுக்கூடு, 67,000 ரூபாய்க்கு விற்பனையானது.குமாரபாளையத்தில்மதுவிற்ற 6 பேர் கைது குமாரபாளையம்: குமாரபாளையத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஓட்டல், தாபா, மளிகை கடைகளில் மது விற்றதாகவும், மது குடிக்க அனுமதித்ததாகவும், வட்டமலை, ராஜம்தியேட்டர், கோட்டைமேடு பகுதிகளை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், 29, கனகரத்தினம், 67, பெருமாள், 62, இப்ராஹிம், 62, ரவிக்குமார், 39, முருகையன், 43, ஆகிய, 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களிடமிருந்து, 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி