உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

ப.வேலுார், ப.வேலுார் போலீஸ் ஸ்டேஷனில், நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட எஸ்.பி., விமலா ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, வழக்கு பதிவேடு ஆவணங்களை பார்வையிட்டார். நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் மற்றும் அது தொடர்பான தகவலை கேட்டறிந்தார். தொடர்ந்து சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை, போதை பொருள் தடுப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். புகார் தெரிவிக்க வரும் பொதுமக்களுக்கு, உடனடியாக அவர்கள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். ஆய்வின் போது டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் சிவகுமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ