உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்பாபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்பாபிஷேகம்

நாமக்கல்: பொங்கல் பண்டிகையையொட்டி, நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. பொங்கல் பண்டிகை, நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் குவிந்தனர். அதில் முக்கியமாக, நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு காலை வடை மாலை சாற்றப்பட்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதில், பஞ்சாமிர்தம், நெய், எண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் மற்றும் சொர்ண அபிஷேகம் செய்யப்பட்டு, பின் மஞ்சள் பட்டுடுத்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து, சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர், ஆஞ்சநேயர் சுவாமிக்கு நேர்த்திக்கடனாக, 10.5 பவுன் எடையளவு கொண்ட தங்க செயின் வழங்கினார். மதியம், பல்வேறு மலர்களை கொண்டு புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதியை சேர்ந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி