உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காலாவதி பொருட்கள் விற்பனை பண்டகசாலை மேலாளர் சஸ்பெண்ட்

காலாவதி பொருட்கள் விற்பனை பண்டகசாலை மேலாளர் சஸ்பெண்ட்

மோகனுார்: மோகனுாரில், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் பணியாற்றுபவர்களுக்காக, கூட்டுறவு ஊழியர்கள் பண்டகசாலை, ரேஷன் கடை, இண்டேன் காஸ் இணைப்பு அலுவலகம் உள்ளது. அதில், நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கூட்டுறவு பண்டகசாலையில், காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வதாக, நாமக்கல் கலெக்டருக்கு புகார் சென்றது. அவரது உத்தரவுப்படி, உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கடலை மாவு, அப்பளம், ரஸ்க் உள்பட, 19 வகையான பொருட்கள் காலாவதியாகி இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, பண்டசாலைக்கு, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பண்டகசாலை மேலாளர் (பொறுப்பு) நடராஜனை, 56, செயல் ஆட்சியாளர் பிரியங்கா, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை