உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலவிநாயகம் தலைமை வகித்தார். துணை தலைவர் பாரதி, செயலாளர் பிரபுசங்கர், மாநில துணை தலைவர் வீர கடம்ப கோபு, பொருளாளர் லோகமணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதோடு திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை வெகுவாக குறைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்-பட்டது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவ-லர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை