உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையத்தில் வரி வசூல் பணி தீவிரம்

பள்ளிப்பாளையத்தில் வரி வசூல் பணி தீவிரம்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், வரி வசூல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பள்ளிப்பாளையம் நகராட்சி பகுதியில், 21 வார்டுகள் உள்ளன. நகராட்சி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும், விசைத்தறி கூடம், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன.நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம், சொத்து வரி, தொழில் வரி, உள்ளிட்ட வரி வசூல் பணியில் நகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், பொதுமக்கள் பலர் தாங்களாகவே முன் வந்து நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி வருகின்றனர். 100 சதவீதம் வரி வசூல் செய்யும் பணியில் பணியாளர்கள், அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்