உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாட்டம்

நாமக்கல் முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.நாமக்கல், மோகனுார் சாலை காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் நேற்று விக்னேஷ்வரர் பூஜையுடன் துவங்கி அபி ேஷகம் நடந்தது. வெள்ளி கவச அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார்.* நாமக்கல் கருங்கல்பாளைம், கரையான்புதுார் கருமலை, தண்டாயுதபாணி கோவிலில் நடந்த விழாவில் நேற்று காலை, பக்தர்கள் முதலைப்பட்டி பைபாஸில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.* நாமக்கல், சக்தி விநாயகர் கோவிலில் பாலதண்டாயுதபாணிக்கு பால், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. சுவாமி முத்தங்கி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.* நாமக்கல், ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில், பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து மலையை சுற்றி வந்தனர். * வையப்பமலையில், குன்றின் மீது அமைந்துள்ள சுப்ரமணியருக்கு அபி ேஷக ஆராதனை நடந்தது. பின் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார்.* நாமக்கல் அருகே ரெட்டிபட்டி பஞ்., கூலிப்பட்டியில் உள்ள கந்தபுரி பழணியாண்டவர் கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. உற்சவர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் கந்தமலையை சுற்றி தேரை இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.* ப.வேலுார் அருகே, கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 5:00 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலையில் திருத்தேர் மலையை சுற்றி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிகழ்ச்சியை பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ.,சேகர், கபிலர்மலை அட்மா வேளாண்மை உழவர் நலத்துறை தலைவர் சண்முகம் தொடங்கி வைத்தனர். ஹிந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் செந்தில்குமார், திருத்தேர் விழாஆலோசனை குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.*குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில், அறுபடை யாத்திரை குழு சார்பில் யாக பூஜை, 108 சங்காபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, சூரியகிரி மலை முருகன் கோவில் சார்பில் ஆயிரம் காவடிகள் அலங்கரிக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து ஊர்வலமாக பக்தர்களால் எடுத்து வரப்பட்டது.* ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு ராஜா சுவாமி கோவிலில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.* கொ.ம.தே.க., சார்பில், சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலில் இருந்து பால் குடம் ஊர்வலம் துவங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சென்று சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலுக்கு சென்றடைந்தது. ராஜ அலங்காரத்தில் முருகன்அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை