உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

தன்னாசியப்பன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

ப.வேலுார், ப.வேலுார், சுல்தான்பேட்டை காந்தி நகரில், விநாயகர், தன்னாசியப்பன், பகவதி அம்மன், கைலங்கிரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணி முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த, 29, அதிகாலை, 5:00 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி ஹோமம், பஞ்சகவ்ய பூஜை, பூமி பூஜை, மகா தீபாராதனை நடந்தது.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 2ம் கால யாக பூஜை, 7:00 மணிக்கு விநாயகர், தன்னாசியப்பன், பகவதி அம்மன் கைலங்கிரி அம்மன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. விழாவில், ப.வேலுார் எம்.எல்.ஏ., சேகர், முன்னாள் டவுன் பஞ்., தலைவர் பொன்னிவேலு, ப.வேலுார் டவுன் பஞ்., தலைவர் லட்சுமி உள்பட பல பங்கேற்றனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்