உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தடுப்பு சுவர் இல்லாத கிணறு

தடுப்பு சுவர் இல்லாத கிணறு

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி அருகிலுள்ள பட்டத்தையன் குட்டை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பட்டத்தையன் குட்டை பகுதியில் இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலையில் மிகவும் பாழடைந்த கிணறு ஒன்று அமைந்துள்ளது. அந்த கிணற்றுக்கும், சாலைக்கும், 10 அடி துாரம் மட்டுமே உள்ளது. தற்போது அந்த பகுதியில் புதியதாக தார்ச்சாலை போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் வேகமாக அந்த சாலையை கடக்கின்றனர். அசம்பாவிதம் ஏற்படும் முன், அப்பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !