உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மெட்டாலா கணவாய் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

மெட்டாலா கணவாய் பகுதியில் மழைநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலா கணவாய் பகுதியில் துார்ந்துபோன மழைநீர் கால்வாயை துார்வார வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமகிரிப்பேட்டை யூனியன், கார்கூடல்பட்டி பஞ்சாயத்தில், மெட்டாலா கணவாய் அமைந்துள்ளது. ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில மெட்டாலா உள்ளது. மெட்டாலா மேட்டில் மழை பெய்தால், கீழே கணவாய்க்கு தண்ணீர் வர சாலையோரம் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். இங்கு இரண்டு பக்கமும் உள்ள நீர்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் மழைநீர் தான், கோரையாற்றுக்கு செல்கிறது.இந்நிலையில், மெட்டாலா மேட்டில் கால்வாயில் கற்கள், மண் கொட்டி அடைத்துக்கொண்டது. இதனால், மழை பெய்தால், மழைநீர் வழிந்து சாலைக்கு வந்து விடுகிறது. சாலையில் மழைநீர் வேகமாக செல்வதால், சாலை எளிதில் சேதமடைந்து விடுகிறது. எனவே மழைநீர் எளிதாக செல்ல கால்வாயை துார்வார வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை