உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் திடீர் குழி அசம்பாவிதத்துக்கு முன் விழிப்பார்களா?

நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் திடீர் குழி அசம்பாவிதத்துக்கு முன் விழிப்பார்களா?

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், நேற்று திடீரென ஏற்பட்ட அபாய குழியால் பயணிகள் பீதியடைந்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன் சரி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, கொல்லிமலை, ராசிபுரம், சேலம், ஈரோடு, கரூர், மோகனுார், துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன் பஸ், மினி பஸ் மற்றும் மப்சல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பகல், இரவு என தினமும், 200க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன.இந்நிலையில், ஈரோடு, திருச்சி பஸ்கள் நிற்கும் இடத்தில், நேற்று காலை திடீரென பெரிய அளவில் அபாய குழி ஏற்பட்டது. பயணிகள் எட்டிப்பார்த்தபோது, மெகா சைஸ் சாக்கடை கால்வாய் செல்கிறது. 4 அடி அகலம், 6 அடி நிலத்திற்கு ஏற்பட்டுள்ள குழியின் ஆழம், 4 அடிக்கு மேல் உள்ளது. இதனால், அப்பகுதி கடைக்காரர்கள், பஸ் டிரைவர்கள், பயணிகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து, நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும், அந்த குழியின் சுற்றுப்பகுதியில் தடுப்பு வைக்கப்படவில்லை. அந்த குழி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அப்பகுதியினர் அச்சம் தெரிவித்தனர். பஸ்சில் ஏறி இறங்கும் பயணிகள், விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. குழந்தைகள், சிறுவர்கள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக அந்த மரணக்குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி