உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு மாரத்தான்

உலக சர்க்கரை நோய் தின விழிப்புணர்வு மாரத்தான்

ப.வேலுார்: அணைச்செய் கண்ணன் ராசப்பன் அறக்கட்டளை மற்றும் பொன்னி மெடிக்கல் சென்டர் சார்பில் குழந்தைகள் தினம் மற்றும் உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தின மாரத்தான் போட்டி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு பழைய பைபாஸ் சாலையில் தொடங்கியது. பரமத்தி வேலுார் எம்.எல்.ஏ., சேகர், பொன்னி மெடிக்கல் சென்டர் டாக்டர் அரவிந்த், அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என, நான்கு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில், 3,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கான, 2 கி.மீ., மாரத்தான் ஓட்டமும், முதியோர், பெண்களுக்கு, 5 கி.மீ., துாரம் வரையிலான ஓட்டமும், ஆண்களுக்கு, 10 கி.மீ., துாரத்தை கடக்கும் ஓட்டமும் நடந்தது. ஏற்பாடுகளை அணைச்செய் கண்ணன் ராசப்பன் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ பொன்னி மெடிக்கல் சென்டர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி