உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை தினம்

அரசு கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை தினம்

நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்க தினம் அனுசரிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். இளைஞர் செஞ்சிலுவை சங்க செயல்பாடு குறித்த அறிக்கையை, தாவரவியல் துறை உதவிப்பேராசிரியர் சந்திரசேகரன் சமர்ப்பித்தார். நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜு பங்கேற்றார். அவர், ''ஒழுக்கத்தோடு கூடிய கல்வியை கற்று சமுதாயத்திற்கும் பெற்றோருக்கும் உதவிடும் வகையில் செயலாற்ற வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, கட்டுரை, ஓவியம், வினாடி-வினா, திருத்தமான கையெழுத்து உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், ரத்த தானம் செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை