| ADDED : ஆக 19, 2024 01:44 AM
குன்னுார்:குன்னுார் மலை பாதையில், நிலச்சரிவு ஏற்பட்ட போது, அபாயகரமாக இருந்த பாறைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.குன்னுார் மலை பாதையில் ஓராண்டிற்கு முன்பு கனமழையில் நந்தகோபால் பாலம் அருகே நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள், மரங்கள், மண் சாலையில் விழுந்தன. மண் மற்றும் மரங்களை அகற்றிய நிலையில் ராட்சத பாறைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், அந்த இடத்தில் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்பட்டது.இந்நிலையில், நந்தகோபால் பாலம் அருகே இருந்த அபாயகரமான பாறைகள், தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு வருகிறது.பாறைகளில் துளையிட்டு உடைத்து,பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நடக்கிறது. இந்த பாறை கற்கள் அதே இடத்தில் தடுப்பு சுவருக்கு பயன்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட உள்ளது.