உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / 100 சதவீத ஓட்டு அவசியம்: செல்பி ஸ்பாட் அமைப்பு

100 சதவீத ஓட்டு அவசியம்: செல்பி ஸ்பாட் அமைப்பு

குன்னுார்:குன்னுாரில் 'செல்பி ஸ்பாட்' ஏற்படுத்தி ஓட்டுப் பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசு ஊழியரகள் ஈடுபட்டுள்ளனர். அதே போல், அனைவரும் ஓட்டு அளிக்க, 'என் ஓட்டு என் உரிமை' என்ற 'செல்பி ஸ்பாட்' குன்னுார் சிம்ஸ் பூங்காவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற தலைப்பில் குன்னுார் வருவாய்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.துவக்க விழாவில், தாசில்தார் கனி சுந்தரம் தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உட்பட வருவாய்துறையினர் பங்கேற்றனர். தொடர்ந்து சுற்றுலா பயணிகள் இதில் நின்று 'செல்பி' எடுத்து செல்கின்றனர்கட்டாயம் தேர்தலில் ஓட்டு அளிக்க சுற்றுலா பயணிகளுக்கும், நீலகிரி மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ