உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 140 மனுக்கள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 140 மனுக்கள்

ஊட்டி;ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 140 மனுக்கள் பெறப்பட்டன.ஊட்டியில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நல துறை மூலம், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து, ஸ்டேன்லி மேத்யூஸ் என்பவருக்கு, மாற்றுத்திறனாளி நிதியுதவி மாதம், 5,000 ரூபாய்கான அனுமதி ஆணை வழங்கப்பட்டது.மகள் திருமணத்திற்காக, டோனி ஜோசப் என்பவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அனுமதி ஆணையும், முன்னாள் படை வீரரின் மனைவி இறந்தமைக்காக, அவரின் மகள் ரெஜினா மேரி என்பவருக்கு, ஈமச்சடங்கு நிதியாக, 7,000 ரூபாய் பெறுவதற்கான அனுமதி ஆணை என, மொத்தம், நான்கு பேருக்கு, 62 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெறுவதற்கான அனுமதி ஆணையை கலெக்டர் வழங்கினார். மக்களிடமிருந்து, 140 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை